கேரளா நபர் கைது... 8 கிலோ கஞ்சா பறிமுதல்... மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கஜேந்திரன் அதிரடி
ரசந்தீப் ராய் ரத்தோர் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படி, போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையாக 21.02.2023 அன்று உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அவர்களுக்கு, பெங்களுர் வெளிவட்ட சாலையில் ஒரு நபர் கஞ்சாவை வெளியூருக்கு எடுத்து செல்ல இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமாக டூர்பேக்குடன் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது முகமது ரபீக் வ/36 த/பெ நசீர், நசீர் அவுஸ், எடக்காடு கண்னூர் மாவட்டம், கேரளா மாநிலம் என்பது கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா எண்ணும் போதைபொருளை விற்பனை செய்வதற்காக சட்டத்திற்க்கு புரம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் அவர்களின் தனிப்படையினர் முகமது ரபீக் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரகசிய தகவல் மூலம் கஞ்சா கடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட பூவிருந்தவல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
No comments
Thank you for your comments