டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஒப்பந்தம்... வலுக்கும் புகார்களும் கோரிக்கைகளும்..
டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஒப்பந்தம் முடிந்ததையொட்டி மாற்று நபருக்கு ஒப்பந்தம் கொடுக்க திட்டம் என புகார்
காஞ்சிபுரம் தெற்கு டாஸ்மார்க் குடோன் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட லாரிகளால் லாரி ஓட்டுநர்கள்,சுமை தூக்கும் தொழிலாளர்கள் அச்சம்
மதுபானங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஒப்பந்தம் மற்றும் தொழிலாளிகளை மாற்றவும் டாஸ்மார்க் நிர்வாகம் திட்டம் தீட்டி வெளி மாவட்ட வாகனங்களை வரவழைத்துள்ளதாகவும் புகார்
லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் குடோன் முன்பு குழுமியதால் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுக்கென பணியை உறுதிபடுத்த தொழிலாளர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் செவிலிமேடு அடுத்த ஓரிக்கை செல்லும் சாலையில் அடுத்துள்ள அரசு மதுபான குடோன்(தெற்கு) இயங்கி வருகிறது.இங்கிருந்து லாரிகள் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கற்பக விநாயகா டிராஸ்பேர்ட் என்கிற பெயரில் வேதபிரகாஷ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்ததின் அடிப்பைடையில் 20-க்கும் மேற்பட்ட ஈச்சர் லாரிகளை கொண்டு மதுபானங்களை ஏற்றி சென்று காஞ்சிபுரம் திருப்புட்குழி முதல் செங்கல்பட்டு மாவட்ட மாமல்லபுரம் வரை உள்ள 120-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறார்.இதில் ஒவ்வொரு லாரிகளிலும் ஓட்டுநர்,சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4பேர் என 5க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுடன் அந்த ஒப்பந்த தேதியானது முடிவடைந்தினுக்கூடிய நிலையில் புதிய ஒப்பந்தமானது மற்றொரு நபருக்கு போடப்படவிருக்கிறது என தகவல் வெளியானது.மேலும் TN-38 என்கிறபதிவெண் கொண்ட ஈச்சர் லாரிகளுடன் கூடிய ஓட்டுநர்களும்,சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் தொழிலாளர்களிடையே அச்ச நிலையானது ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பழைய ஒப்பந்த லாரிகளில் பணிபுரிந்த ஓட்டுநர்கள்,சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மார்க் குடோன் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பலரும் 15ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதாகவும் இதனை நம்பியே 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும்,வேலை பறிபோகும் பட்சத்தில் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதால் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ள வேண்டாம் எனவும் கூறி வேதனைபட்டனர்.
இதனையெடுத்து போராட்டத்தில் பழைய தொழிலாளன்களையே அழைத்த டாஸ்மார்க் நிர்வாகம் வழக்கம் போல் அவர்களுக்கு பணியினை வழங்கி பழைய வாகனங்களிலே மதுபானங்களானது ஏற்றி செல்லப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும் புதிய ஒப்பந்தமானது விடப்படவிருக்கும் நிலையில் டிரான்ஸ்போர்ட்டை மாற்றி ஒப்பந்தம் போடப்பட்டு தொழிலாளர்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனால் தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு தங்களது பணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏற்கனவே திருமழிசை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே பிரச்சனை புதாகரமாக வெடித்திருந்தது.தமிழகம் முழுவதும் இப்பிரச்சனையானது தொடர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்டாலும் இதையே நம்பி பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை உறுதிசெய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழிலாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments
Thank you for your comments