Breaking News

காவல்துறையினரின் தன்னலமற்ற மற்றும் உன்னதமான சேவைகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி

சேவையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த காவலர்களின் களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில்  13.03.2023 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 


 திரு. சந்தீப் ராய் ரத்தோர்  இ.க.ப.,  காவல்துறை ஆணையர், ஆவடி காவல் ஆணையர் அவர்கள்,  201 காவல் ஆளிநர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழ்களை வழங்கினார். 



மேலும் சான்றிதழ்களை பெறும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் ரூ.2000/- (G.O.Ms No.13.Finance (Pay cell) Department. dated 04-01-1996) ன் படி ரொக்கப் பரிசு வழங்கியும், காவல்துறையினரின் தன்னலமற்ற மற்றும் உன்னதமான சேவைகள் குறித்து பாராட்டி பேசினார். 

  இந்நிகழ்ச்சியில் டாக்டர் விஜயகுமார், இ.க.ப., காவல்துறை இணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருமதி. பி.உமையாள், காவல்துறை துணை ஆணையர், தலைமை அலுவலகம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலக நிர்வாகி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments