துவாரகாஷ் வித்யாஸ்ரமம் இன்டர்நேஷனல் பள்ளியில் டிவைஸ் எக்ஸ்போ 2023 அறிவியல் கண்காட்சி
காஞ்சிபுரம் வெள்ளை குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள துவாரகாஷ் வித்யாஸ்ரமம் இன்டர்நேஷனல் பள்ளியில் டிவைஸ் எக்ஸ்போ 2023 அறிவியல் கண்காட்சி விமர்சையாக நடைபெற்றது.
இதில் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான டாக்டர்.சஞ்சீவி ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்யார் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியின் பாட்டனி டிபார்ட்மென்ட் தலைவர் பேராசிரியர் டாக்டர் கங்கா தேவி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கொத்துவ கேட்டு துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஓய்வு பெற்ற ராமானுஜம் கல்லூரி முதல்வர் நித்தியா பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 200 படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது மேலும் மாணவ மாணவிகள் தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி ஆகிய மொழிகளில் விளக்க உரையும் ஆற்றி பாராட்டுகளை பெற்றனர்
இதில் ஏராளமான பெற்றோர்கள் ஆர்வமுடன் மற்றும் ஆச்சரியத்துடன் கண்டுக்களித்தனர் இவ்வளவு சிறப்பு வாய்ந்த அறிவியல் கண்காட்சி இங்குதான் முதன் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து பள்ளியின் தாளாளரும் நிறுவனமான டாக்டர் சஞ்சீவி ஜெயராம் சிறப்பு பேட்டி அளித்தார்
No comments
Thank you for your comments