Breaking News

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்... பரிசுகள்...

காஞ்சிபுரம், மார்ச் 18:

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பில் உலக மகளிர் தின விழாவை கொண்டாடும் விதமாக மகளிர்களுக்கு பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இசை நாற்காலிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற வான்மதிக்கு பரிசு வழங்கிய சங்கரா கல்லூரிப் பேராசிரியர் பரிமளா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் துணைப் பேராசிரியர் பரிமளா தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்க்கு பரிசுகளை வழங்கினார்.

பரிஷத் உறுப்பினர்கள் பிந்து,சாதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உறுப்பினர் விஜயலெட்சுமி மகேந்திரன் வரவேற்று பேசியதுடன் மகளிர்க்கான விளையாட்டுக்களையும் நடத்தினார்.



பரிசளிப்பு விழாவில் வடதமிழக மாத்ரு சக்தி அமைப்பாளர் ஜெயந்தி சுரேஷ்,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக அமைப்பு செயலாளர் ராமன்ஜி, மாவட்ட தலைவர் சிவானந்தம், ஜவஹர்பாபு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக இசை நாற்காலிப் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. நிறைவாக சிவ.ஈஸ்வரி முனியசாமி நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments