Breaking News

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு பாஜக சார்பில்அஞ்சலி

காஞ்சிபுரம்,மார்ச் 18:

அருணாசலப்பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரான ஜெயந்த்க்கு காஞ்சிபுரம் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


தேனிமாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்த்.துணை விமானியாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர் அருணாசலப்பிரதேசத்தில் மேற்கு காமங் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.


இவருக்கு காஞ்சிபுரம் செங்கழு நீரோடை வீதியில் பாஜக மேற்கு மண்டலம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மேற்கு மண்டலத்தின் நிர்வாகி மோகன்லால் ஜெயின் தலைமை வகித்து ஜெயந்தின் உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலத் தலைவர் காஞ்சி.வி.ஜீவானந்தம்,பிற மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஜெயின்,பொதுச் செயலாளர் கோடீஸ்வரன், செயலாளர் தனலட்சுமி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஜெயந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

படவிளக்கம்}விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் ஜெயந்த் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய காஞ்சிபுரம் பாஜக நிர்வாகிகள்

No comments

Thank you for your comments