Breaking News

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆறுதல்

காஞ்சிபுரம் மாவட்டம்  ஓரிக்கை  பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்  காயமடைந்தவர்களை மாண்புமிகு குறு ,சிறு  மற்றும்  நடுத்தர தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் இன்று (22.03.2023)  நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.





காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்தவர்களை மாண்புமிகு குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து விபத்து  நடந்த பட்டாசு ஆலையை  நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கூறியதாவது :

இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில்  27  நபர்களுக்கு  காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 3 நபர்கள் இறந்து விட்டனர்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற வழியில் 5 நபர்கள் இறந்து விட்டனர்,  ஆக 27 பேரில், 8 பேர் இறந்து விட்டார்கள். 

8 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில்  ஐந்து  பெண்களும், மூன்று  ஆண்களும் ஆவர்.  7 பேர் செங்கல்பட்டு பொது அரசு மருத்துவமனைக்கும், ஒரு நபர் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிச்சயமாக நிதி அளிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்வில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் அவர்கள், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்  தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ம.சுதாகர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா அவர்கள்,  காஞ்சிபுரம் மாநகராட்சி  மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் திருமதி.மலர்கொடி குமார், திரு.தேவேந்திரன் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்  திருமதி. கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments