வெடி விபத்து நடந்த சம்பவ இடத்தினை தமிழக காவல்துறை வடக்கு மண்டல தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு
வெடி விபத்து நடந்த சம்பவ இடத்தினை தமிழக காவல்துறை வடக்கு மண்டல தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள வளத்தோட்டம் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
வெடி விபத்து நடந்த சம்பவ இடத்தினை காவல்துறை வடக்கு மண்டல தலைவர் கண்ணன், டிஐஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்த பின்னர் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் விபத்தினை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது டிஎஸ்பி ஜூலியசீசர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.
வெடி விபத்து நடந்த சுற்றுவட்டார பகுதி மற்றும் காஞ்சிபுரம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






No comments
Thank you for your comments