முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகர இளைஞர் அணி சார்பாக கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று இரத்ததான முகாம் மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க சுந்தர் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது
இதில் கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் காஞ்சிபுரம் மாநகர கழக செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ப. அப்துல் மாலிக் க_பிரபு மாநகர கழக நிர்வாகிகள் எ.எஸ்.முத்துசெல்வன் வ ஜெகநாதன் பி.நிர்மலா கு. சுப்பராயன் பகுதி கழக செயலாளர்கள் எஸ் சந்துரு கே.திலகர் அ.தசரதன் சு.வெங்கடேசன் பகுதி கழக நிர்வாகிகள்-வட்டக் கழக செயலாளர்கள்-வட்ட கழக நிர்வாகிகள்-மண்டல குழு தலைவர்கள்-மாமன்ற உறுப்பினர்கள்-நிலை குழு தலைவர்கள்-மாவட்ட பிரதிநிதிகள்-மாநகரப் பிரதிநிதிகள் மாவட்ட-மாநகர-வட்டகழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.





No comments
Thank you for your comments