யதோக்தகாரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்ச்சவத்தையொட்டி கருட சேவை
108 திவ்விய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று அழைக்கபடக்கூடிய யதோக்தகாரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்ச்சவத்தையொட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றுவருகிறது.
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் வைணவ திருத்தலத்தில் 108 திவ்ய தேசங்களில் அதிக அளவிலான திவ்ய தேசங்கள் அமைந்துள்ள நகரமாகவும் விளங்கி வருகிறது.
அந்த வகையில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலமாக விளங்கக்கூடிய சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று அழைக்கபடக்கூடிய யதோக்தகாரி பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்ச்சவமானது வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வாண்டின் கான் பிரம்மோற்ச்சவமானது கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் காலையிலும்,இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் யதோக்தகாரி பெருமாள் கோமளவல்லி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில் இப்பிரம்மோற்ச்சவத்தின் மூன்றாம் நாளான இன்று காலை விஷேசமாக கருதப்படும் கருடசேவை உற்சவமானது நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் யதோக்தகாரி பெருமாள் கருடன் வாகனம் மீது அமர்ந்து எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையொட்டி பஜனை கீர்த்தனைகளை முழங்க பக்தி பரவச பஜனை கோஷ்டி பக்தர்கள் நடனமாடி சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இப்பிரம்மோற்ச்சவத்தின் கருடசேவை உற்சவத்தினை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments