பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் - விவசாயிகள் ஆவேசம்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடத்தப்படுமென தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் திட்டவட்டம்
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சட்டவிரோதமான செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அருகேயுள்ள காவலன்கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாதிக்கபடக்கூடிய கிராம மக்களும் பங்கேற்பு
200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தையொட்டி தடுப்புகள் அமைத்து 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி அமர்த்தம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க பறந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4700 விளைநிலங்கள் கையகப்படுத்த உள்ளதாகவும் இதில் ஏறி குளம் வீடு பள்ளிக்கூடம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஏராளமான விளைநிலங்கள் அழியும் அபாயம் ஏற்படுவதாக கூறி கடந்த 231 நாட்களாக ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் விவசாய சங்க மாநில செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாய சங்கத்தினர் கிராம பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை சுற்றுச்சூழல் அறிக்கை உள்ளிட்டவை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் போது விவசாயிகள் ஒப்புதலும் இல்லாமல் நிலம் எடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகளை அளித்து விமான நிலையம் அமைக்க வேண்டாம் என உறுதியாக கோரிக்கை வைக்கிறோம் என விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் மாநிலத் தழுவி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் நடத்தப் போவதாக விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.


.jpg)
No comments
Thank you for your comments