திருப்புக்குழி அரசு ஆரம்ப பள்ளியில் ரூபாய் 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் பணி தொடங்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
கழகத்தின் மு.பொது செயலாளர் இனமான பேராசிரியர் திரு.க. அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலமாக காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புக்குழி அரசு ஆரம்ப பள்ளியில் ரூபாய் 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணியை மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.சிவிஎம்பி.எழிலரசன் அவர்கள் துவங்கி வைத்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பிஎம் குமார், ஒன்றிய குழு தலைவர் திருமதி மலர்க்கொடி குமார், ஒன்றிய அவைத்தலைவர் திரு.எஸ் மாரிமுத்து, ஒன்றிய து.செயலாளர்கள் திரு. இளஞ்செழியன் திரு.எஸ்வி ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் திரு.பி.என்.ரவி, திரு.நா.கருணாகரன், பாலசந்தர், சம்பத், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயஸ்ரீ, சைதர்அலி, ரமேஷ், பார்த்தசாரதி, அன்பரசு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பவானி திரு வரதராஜன் உதவி பொறியாளர் சகுந்தலா தேவி மற்றும் பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments