வடமாநில தொழிலாளர்களின் நலன் தொடர்பாக கம்பெனி மேலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரவுவதை தொடர்ந்து அதனை தடுக்கும் பொருட்டும், வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் இருங்காட்டுக்கோட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மாவட்ட காவல்துறையும் இணைந்து 06.03.2023 அன்று இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சைமா அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா Dr.M.சுதாகர் அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.வினோத் சாந்தாரம் துணை கண்காணிப்பாளர் திரு.சுனில், காவல் ஆய்வாளர் திரு.நிவாசன், திரு.வெங்கடேசன், தலைவர் (சைமா) திரு.விவேக் சீதாரம். செயலாளர்(சைமா), திரு.வரதராஜன், திட்ட மேலாளர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் மற்றும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 100 மனிதவள மேலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா Dr.M.சுதாகர் உரையாற்றியதாவது,
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் பிரச்சனை மற்றும் அவர்களுடைய சம்பளப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். பகல் மற்றும் இரவு ரோந்து மேற்கொள்ளும்போது வடஇந்தியர்களுடன் கலந்து உரையாட வேண்டும்.
ஊழியர்களின் சம்பள பட்டியலில் வருங்கால வைப்பு நிதி இடம்பெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தியர்களின் நலனை உறுதி செய்வதற்கு வட இந்தியர்களுடன் தொடர்பை மேம்படுத்த ஒவ்வோரு நிறுவனங்களிலும் தனியாக ஒரு மனிதவள மேலாளரை நியமிக்க வேண்டும்.
காவல்துறை உதவி எண்களை கொண்ட சுவரொட்டி/பிளக்ஸ் போர்டுகளை வைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வெளிமாநில தொழிலர்களின் எண்ணிக்கை கணக்கெடுத்து அந்த விவரத்தை பராமரிக்க வேண்டும். வெளிமாநில பணியாளர்களை தக்க பாதுகாப்புடன் குடியமர்த்தி அவர்களிடையே ஏற்படும் அச்சங்களை அகற்ற வேண்டும் என்றவாறு எடுத்துரைத்தார்.
No comments
Thank you for your comments