Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் 10வது நாள் பிரம்மோத்ஸவம் விழா - உபயதாரர் ஜெயம் குரூப் நிறுவனர் எஸ் ஆர் மணிகண்டன் ஏற்பாடு

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் மாவட்டம் உலக புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் 10வது நாள் பிரம்மோத்ஸவ விழா வெகு விமர்சையாக உபயதாரர் ஜெயம் குரூப் நிறுவன தலைவர் எஸ்.ஆர். மணிகண்டன் ஏற்பாட்டில் அம்பாளுக்கு புடவை மற்றும்  ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உட்புறத்தில் அமைந்துள்ள நவராத்திரி மண்டபத்தில் 06.03..2023 அன்று மாலை 6 மணி அளவில் கர்நாடகா இசை நிகழ்ச்சி-பிரபல கர்நாடக பாடகர்  தாஸ ஸாஹித்ய பூஷணா.வி.வி.ப்ரஸன்னா தலைமையிலான குழு பாடல்களை பாடி அசத்தினார்கள் இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .


இந்நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேசு ஐயர் மற்றும் காஞ்சி சங்கர மடம் நகர வரவேற்பு குழு கமிட்டி கௌரவ தலைவர்  எம்.ஜி.பாபு , தலைவர் டாக்டர்  டி.கணேஷ் , பொருளாளர் ராஜேஷ் ஜெயின் , துணைத் தலைவர் ராமா ஸ்கேப் ஹோட்டல் நிறுவனர் சுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கலை இராம.வெங்கடேசன் மற்றும் ஜெயம் குரூப் நிர்வாகிகள், குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜெயம் குரூப் நிறுவன தலைவர் எஸ்.ஆர். மணிகண்டன் சிறப்பாக செய்திருந்தார்.

ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ சுபக்ருத் வருஷத்திய பிரம்மோத்ஸவம் பத்தாவது நாள் அன்று பகல் சரபம் வாகனமும் இரவு  கல்பகோத்யானம் வாகனமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments