சட்டம் ஒழுங்கு ஆய்வு மற்றும் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு சம்மந்தமான கலந்தாய்வு கூட்டம்
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவுபடி தமிழ்நாடு காவல் துறைத் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்(சட்டம் மற்றும் ஒழுங்கு) K.சங்கர் அவர்கள் தலைமையில் 18.03.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரகத்திற்கான சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நல்லுறவு கூட்ட அரங்கில் போதைப்பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு கலந்தாய்வ கூட்டம் நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் டாக்டர்.N.கண்ணன், இ.கா.ப., காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன், இ.கா.ப., காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.A.பிரதீப், இ.கா.ப., திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர்.P.C.கல்யாண், இ.கா.ப., உட்பட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள். காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக மாவட்டஙகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து காவல் நிலையஙகளில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் சந்தித்து பொது மக்களிடம் அவர்கள் அன்பான அணுகுமுறைகளை கடைபிடிப்பதுப்பற்றி அறிவுரைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சரகத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கான சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம நடைபெற்றது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நல்லுறவு கூட்ட அரங்கில காஞ்சிபுரம் சரகத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகளை குறித்தும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் முதல்வர் தலைமை ஆசிரியர் தலைமையில் போதைபொருள் தடுப்பு குழு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதையும், அக்குழு சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து போதைப்பொருள் பயன்பாடுகள் இருப்பின் அத்தகவல்களை இரகசியமாக காவல்துறையினருக்கு தெரிவித்து போதை பொருளின் நடமாட்டத்தை கட்டுபடுத்தியுள்ளதை பாராட்டியும், மேலும் போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பிரிதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 200 நபர்கள் கலந்ததுகொண்டனர்.
மேலும் காஞ்சிபரம் மாவட்டத்தில் அதிகமாக விபத்துகள் முன்பு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, விபத்துக்களைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.



No comments
Thank you for your comments