Breaking News

கரும்பு வெட்டும் தொழிலாளி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நந்தபாடி கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிற்சங்க மேஸ்திரி மாரிமுத்து. இவர் கடந்த  2022- டிசம்பர் 6-ஆம் தேதி, அதே ஊரைச் சேர்ந்த,  கொளஞ்சி மனைவி பார்வதி என்பவருக்கு கரும்பு வெட்டி தருகிறோம் என்று கூறி அட்வான்ஸ் தொகையாக ரூபாய் 5000 வாங்கியுள்ளார்.


அதன் பின்பு ஒரு வாரம் கழித்து கரும்பு வெட்ட செல்லும்போது, மழையின் காரணமாக, வழி பாதை ஈரம் இருந்ததால், கரும்பு வெட்டி தர முடியவில்லை.

அதன் பின்பு அந்த அட்வான்ஸ் தொகை கேட்டு பார்வதி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்ததில்,  நாங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறிய பின்பும், கொளஞ்சி எங்கள் மீது அடிக்கடி புகார் கொடுத்து வந்ததால், மன உளைச்சலில் ஏற்பட்டு உள்ளதாக கூறி, விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் தீக்குளிக்க முயன்றனர்.

இதனைப் பார்த்த காவல்துறையின் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments