உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை 14-03-2023 அன்று வழங்கினார்.
உடன்மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப் பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, திட்ட இயக்குநர் திரு.செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் திரு.தேவேந்திரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன்ஆகியோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments