காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பலி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று திடீர் வெடி விபத்தானது ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 5பேரும் என மொத்தம் 9பேர் உயிரிழந்தனர்.
மேலும் 18பேர் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் செங்கலப்பட்டு அரசு மருத்துவமனையில் 90% தீக்காயங்களுடடன் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன்(50),ஜெகதீசன்(35) ஆகிய இரண்டு பேர் இன்று அதிகாலை அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போதிய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 10பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமைனையில் 4பேரும்,சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2பேர் என மொத்தம் 16பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளரான நரேந்தரன்,ஆலையை நிர்வகித்து வந்த சுதர்சன் மற்றும் மேலாளர் மணிகண்டன் ஆகியோர் மீது 5பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்றைய தினமே பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை கைது செய்தனர்.
பட்டாசு ஆலையை நிர்வகித்து வந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட மேலாளர் மணிகண்டனும் காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


No comments
Thank you for your comments