தமிழகத்தில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரை கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு
காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றவாளியை புதுக்கோட்டையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் சந்தானம்(எ)சந்தானபாரதி என்பதும் டாக்ஸி ஓட்டுநராக இருந்து வருவதும் தெரியவந்தது காஞ்சிபுரத்திற்கு பட்டுச்சேலை வாங்குவதற்காக புதுக்கோட்டையில் இருந்து பட்டு சேலை கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அருகாமையிலுள்ள டீ கடையில் பேப்பர் பார்த்துகொண்டிருந்த போது அதில் ஓர் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி என இருந்திருப்பதாகவும் அப்போது பட்டு சேலை உரிமையாளர் கடையின் எண்ணெய் குறித்து கொண்டு வைத்திருந்த குற்றவாளி தொலைபேசியிலிருந்து அழைத்து பேசியதும் மேலும் மாவட்ட ஆட்சியர் பெண்ணாக இருக்கவே பெண் குரல் மாற்றுதல் ஆஃப் மூலம் மாற்றி மாவட்ட ஆட்சியரை போல் பேசி நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது
சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்
இது மட்டும் இல்லாமல் வாணியம்பாடி,திருப்பூர்,ஈரோடு,ஊட்டி,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களை போன்றே அந்த ஊர்களுக்கு செல்லும் போது ஆட்சியர்கள் ஆண்கள் என்றால் ஆண் போன்று பேசி தொழில் செய்யக்கூடியவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பு மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள் என்றால் குரல் மாற்று ஆஃப் மூலம் மாற்றி பேசுவதுமாக தொடர் பணியாகவைத்து வந்துள்ளார் நான்கு ஊர் மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளை...
மேலும் இவர் செல்லக்கூடிய ஊர்களிலுள்ள ஏதேனும் அழகு நிலையத்திற்கு சென்று சினிமா சூட்டிங்கிற்காக மேக்கப் செய்ய வேண்டும் என முன்கூட்டியே பேசி அவர்களது வங்கி கணக்கு எண்ணை பெற்று அதில் பணம் போட வைப்பதும் பின்னர் அக்கடைகளுக்கு சென்று சூட்டிங் ரத்து ஆகிவிட்டது என கூறி தங்களுக்கான இழப்பு தொகையை எடுத்துக்கொண்டு பணத்தினை கொடுக்க கூறி அவர்களிடமிருந்து பணத்தினை பெற்று செல்வதுமான அதிர்ச்சியூட்டும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது
ஏற்கனவே நான்கு மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில் காஞ்சிபுரத்தில் மட்டும் பணமே பெறாமலேயே மோசடி பேரோழி சிக்கியிருக்கிறான்.


No comments
Thank you for your comments