Breaking News

காஞ்சியில் கோவில் குளத்தில் இருந்த மரநாயால் மக்கள் அச்சம்

மரநாய் என்பது ஒரு அரிய வகை பாலூட்டி விலங்கினம் ஆகும். எலிகளையும், அணில்களையும், பறவைகளையும் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டது .தனது உணவுகளை வேகமாக சென்று பிடித்து உண்ணுவது வழக்கம். 


இந்த வகை மர நாய்கள் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில் இருப்பதுண்டு .அடர்ந்த  பழுப்பு நிற வண்ணத்தில் காணப்படும் இந்த மர நாயானது காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் குளத்தில் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற மக்களும், கோவிலை சேர்ந்தவர்களும் தீயணைப்பு துறையினருக்கும்,, வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் மர நாய்களை பிடிக்கும் கூண்டு எங்களிடம் இல்லை என கூறி வந்த நிலையில் தீயணைப்பு துறையினர் மரநாய் காணப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்பொழுது மர நாயின் கால் அடிபட்டு அது ஓட இயலாமல் மெதுவாக நடந்து சென்றது .


பின்னர் தீயணைப்பு துறையினர் அந்த மரணையை வளை கொண்டு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினரிடம்  இதுகுறித்து கேட்ட பொழுது  இந்த அறிய வகை மர நாயை  வண்டலூர் உயிரியல்  பூங்காவில் ஒப்படைப்போம் அல்லது வனத்தில் விட்டு விடுவோம் என தெரிவித்தனர் .

இந்த அரிய வகை அடர்ந்த பழுப்பு நிற மரநாயை  காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments

Thank you for your comments