காஞ்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற தடபுடல் பிரியாணி விருந்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் திமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியும், சைவ அசைவ உணவுகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் மாநகர திமுக கழகம் 30வது வட்டம் சார்பில் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் சின்ன காஞ்சிபுரம் அமுதபடி தெரு சந்திப்பு பகுதியில் பொது மக்களுக்கு பந்தி போட்டு தல வாழை இலையில் சுட சுட அறுசுவை பிரியாணி விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமன க.சுந்தர் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பந்தியில் அமர்ந்திருந்த ஏழை எளிய பொது மக்களுக்கு சுட சுட ஆவி பறக்க அறுசுவை அசைவ பிரியாணியினை பரிமாறி விருந்தளித்தார்.
இதனையடுத்து சின்ன காஞ்சிபுரம் பட்டாளத் தெருவில் 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை அசைவ பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமன க.சுந்தர் எம்.எல்.ஏ பங்கேற்று ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும்,அசைவ பிரியாணியையும் அவர் வழங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதினால் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்று அசைவ பிரியாணியினை உண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாநகர செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.


No comments
Thank you for your comments