அமித் ஷாவுடன் ஆர்.என்.ரவி சந்திப்பு... ஆக்கபூர்வமாக இருந்ததாக ஆளுநர் மாளிகை தகவல்
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 23) அவசரமாக டெல்லி சென்றார். இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்தத் தகவலை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் ட்விட்டர் பக்கத்தில்,
"ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Governor Thiru. Ravi had a fruitful meeting with Hon'ble Home Minister Thiru. Amit Shah in Delhi.@PMOIndia @HMOIndia @PIB_India @ANI @PTI_News pic.twitter.com/TSXYv2H1fb
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 23, 2023
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், டெல்லியில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார். @PMOIndia @HMOIndia @PIBchennai @ANI @PTI_News pic.twitter.com/xrz6ybcSyC
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 23, 2023

No comments
Thank you for your comments