Breaking News

மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீடிர் சோதனை

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி.கலைசெல்வன் தலைமையிலான 8க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை

அதேபோல் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர்  சோதனை

ஒவ்வொரு பிரிவிலும் தற்போதைய பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கிட்டு, முறையாக இருக்கிறதா என சோதனை




தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள  ஆதார் பிரிவு, நில அளவை பிரிவு, கணக்கு பிரிவு, வரி செலுத்தக்கூடிய பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்  தீடிர் சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

இதில்  அங்கு இருக்கக்கூடிய பணத்தினை பெற்று அவை கணக்கில் வருகிறதா,கணக்கில் வராத பணம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணையானது தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு அகின்ற நிலையில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கு, கட்டிட வரைப்படம் அனுமதி வழங்கும் பிரிவில் அனிமதி வழங்குவதற்கு அதிகாரிகள் அதிகளவில் கையூட்டுகள் பெறுவதாக எழுந்த தொடர் புகார் காரணமாக இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே போல காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து பிரிவுகளிலும் சோதனை மேற்கொண்டு,அங்கும் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா என சோதனை மேற்கோண்டு வருகின்றனர்.



லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை முழுமையாக முடிந்த பிறகு தான் முக்கிய ஆவணங்கள்,பணம் உள்ளிட்டவைகள் ஏதேனும் பறுமுதல் செய்யபட்டதா என்பன குறித்த தகவல் கிடைக்கும்.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த திடீர் சோதனை காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளே செயல்படும் நில அளவை பிரவில் போதிய அலுவலர்கள் இல்லாததால், ஆள் வைத்து வேலை பார்ப்பதாகவும், அவர்களுக்கு சம்பளம் வழங்க தான் தாங்கள் லஞ்சம் கேட்பதாக கூறும் தற்காலிக அலுவலர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்  பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்திய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments