Breaking News

பொது தேர்வெழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது...

+1 பொது தேர்வெழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு போக்சோ

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஜெகன்நாத் மாற்றுதிறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்

அரியர் தேர்வெழுத வந்த +1 மாற்றுத்திறனாளி மாணவிக்கு தேர்வு அலுவலராக திருப்பும்குழி அரசு பள்ளிக்கு சென்ற போது பாலியல் தொந்தரவு*

மாணவி தனது பெற்றோரின் கூறிய நிலையில் அவர்களது பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் ஜெகன்நாத்-ஐ கைது செய்து பாலுசெட்டி காவல்துறையினர் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13917 பேர் பிளஸ் டூ தேர்வினையும், 13114 பேர் +1 தேர்வினையும்  53 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். 



காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 பேர் மாணவர்களும், 7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் பிளஸ் டூ மற்றும் +1 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு, அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வரும்  பிளஸ் +1 அரசு பொதுத்தேர்வில்  முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் மாணவி நேற்று பிளஸ் ஒன் தேர்வு எழுத வந்துள்ளார்.அம் மாணவிக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு,தேர்வு எழுத உதவிக்காக நியமிக்கப்பட்ட 

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகன்நாத்  உதவியுடன் தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில்  தேர்வு எழுதி கொண்டிருந்த போது  அம்மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அம்மாணவி தனது  பெற்றோரிடம் தெரிவித்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்த  அம்மாணவியின் பெற்றோர் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் இது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து உடனடியாக  பாலு செட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார்  அப்பள்ளிக்கு சென்று  மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டதில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதன்பின் இது குறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில், போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செண்று  விசாரணை மேற்கொண்டு,மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 6மாத காலமாக வேதியியல் பாடபிரிவு  ஆசிரியர் ஜெகன்நாத் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+1பொதுத்தேர்வு எழுதிய  மாற்றுத்திறனாளி மாணவிக்கு, தேர்வு எழுத உதவியாக  நியமிக்கப்பட்ட பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் அம்மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments