Breaking News

கேஜிசிஎம் பள்ளியின் 15வது ஆண்டு விழா

 காஞ்சிபுரம் ஜவுளிக்கடை சத்திரத்தில் நடைபெற்ற  கேஜிசிஎம் பள்ளியின்  15வது ஆண்டு விழாவில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் பங்கேற்றார்.

 காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடை சத்திரம் தர்மபுரி பாலன மகிமை சங்கம் சார்பில் இயங்கி வரும் கே ஜி சி எம் பள்ளியில் 15 ஆவது ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது 

இதில் சங்கத்தின் செயலாளர் மாணிக்கவேலு வரவேற்புரை ஆற்றினார் தலைவர் குமாரகாளத்தி மற்றும் முதல்வர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இவருக்கு சங்கம் சார்பில் பொன்னாடைகளை அணிவித்து நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது 


இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும். சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும். பள்ளியின் ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவர் பிரபாகரன் பொருளாளர் அருள்குமார். மாமன்ற உறுப்பினர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி  பாராட்டினர். 

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் துணைச் செயலாளர் ஏ கே தங்கவேல் நன்றிகளை தெரிவித்தார்

No comments

Thank you for your comments