லஞ்சம் வாங்கியதாக ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது
காஞ்சிபுரம்,மார்ச் 14:
காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட இருவரும் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலிஸாரால் செவ்வாயக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
படவிளக்கம் (1)வேண்டா சுந்தரமூர்த்தி (2)புவனா |
காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் வேண்டா சுந்தரமூர்த்தி(48) அதிமுக ஆதரவாளரான இவரிடம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐயங்கார் குளத்தில் வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்ட ஊராட்சியில் விண்ணப்பித்த போது அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸôரிடம் புகார் செய்தார். இந்நிலையில் லஞ்சத்தொகை ரூ.15 ஆயிரத்தை அவர் வேண்டா கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்த போது அத்தொகையை ஊராட்சியில் செயலராக பணிபுரிந்து வரும் புவனாவிடம் கொடுத்து விடுமாறு கூறியிருக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தி ரசாயணம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்த போது அப்பகுதியில் மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸôர் ஊராட்சி செயலாளர் புவனா(42)மற்றும் ஊராட்சி மன்ற தலைவியான வேண்டா கிருஷ்ணமூர்த்தி(48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
No comments
Thank you for your comments