Breaking News

குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது. 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணி அலுவலர் திருமதி சுசீலா முந்நிலை வகித்தார்

இதில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு   குழந்தை கடத்தல்  சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பதை தவிர்க்க பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  

பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க விழிப்புணர்வு  பெண் குழந்தை சிசு கருக்கலைப்பு தடுக்க விழிப்புணர்வு  குழந்தைகள் பள்ளியில் விடுபடாமல் சேர்த்தல்  ஆதார் பதிவு செய்தல்  தடுப்பூசி முறையாக செலுத்துதல்  போதைப் பொருள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த  குழந்தை பாதுகாப்பு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

இதில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எழில்,  கிராம நிர்வாக அலுவலர் ஹேமலமா,  அங்கன்வாடி ஆசிரியர்கள்  பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள்,  வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள்  மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments