Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள பெடரல் வங்கி சார்பில் 15 லட்சம் மதிப்பில் 3 வாகனங்கள் வழங்கல்...

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பெடரல் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள 15 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள்  வழங்கப்பட்டது 

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் மாநகராட்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தூய்மை நோக்கும் ஒரு படி என்ற இயக்கத்தின் மாநகராட்சிக்கு பேட்டரியால் இயங்கும் குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்ல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

இதில் ஆணையர் கண்ணன் தலைமை தாங்கினார் பெடரல் வங்கி மேலாளர் அனிதா டிசம்பர் மாதம் முதல் கட்டமாக 7.5 லட்சம்  மதிப்பீட்டில் ஐந்து வாகனங்களும்  இரண்டாம் கட்டமாக மேலும் 5 வாகனங்களும் ஆக மொத்தம் 15 லட்சம் மதிப்பிலான 10, வாகனங்கள். மகாலட்சுமி யுவராஜ் மேயர் பெற்றுக் கொண்டார்.  இதனை தொடர்ந்து வாகனங்களை மேயர் இயக்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் பெடரல் வங்கி மண்டல மேலாளர் மீனாட்சி சுந்தரம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பெடரல் வங்கி அலுவலர்கள் மகாதேவி சங்கர் சந்தோஷ் கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments