Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் வீதியுலா

காஞ்சிபுரம், மார்ச் 16:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை உற்சவர் காமாட்சி பூப்பல்லக்கில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன்

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நிகழ்மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெற்றது. 



அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது.இதன் நிறைவுநாளையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விடையாற்றி உற்சவ நிறைவுநாளையொட்டி
ராஜவீதிகளில் பவனி வந்த பூப்பல்லக்கு

சிறப்பு தீபாராதனை நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.கண்ணன்,செயலாளர் மதன்குமார் உட்படநிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

விந்தையா? விஞ்ஞானமா? - வைரல் வீடியோ

பல்லக்கு காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் வந்த போது ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தலைமையிலான குழுவினர் காமாட்சியம்மனுக்கு வரவேற்பு அளித்தனர்.வாணவேடிக்கைகளும் நடைபெற்றது.

சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களின் நாகசுர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.பின்னர் அம்மன் பூப்பல்லக்கில் ராஜவீதிகள் வழியாக சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.


No comments

Thank you for your comments