வேளாண் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி வேளாண் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், புளியம்பாக்கம் கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
புளியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு கிராம அளவில் திட்ட செயலாக்கம் மற்றும் பஞ்சாயத்து நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அக்கூட்டத்தில் பங்கு பெற்ற பொது மக்களிடம் கிராம அளவில் 5 ஆண்டு திட்டம் குறித்தும் கிராம திட்ட செயலாக்க குழு அமைத்தல் குறித்தும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் கிராம அளவில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தெரிவிக்கும் பட்சத்தில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தார்பாய், வேளாண்கருவி, பேட்டரி தெளிப்பான், உளுந்து விதைகள், பழமரக்கன்றுகள் போன்ற வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், சொட்டு நீர் பாசன முறையில் தர்பூசணி சாகுபடி, வேளாண் பொறியியல் துறையின் மூலம் 100 சதவீத மானியத்தில் அமைத்து தரப்பட்ட பண்ணை குட்டையினையும், அதில் அட்மா திட்டம் மற்றும் மீன்வளத்துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்ட மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும் சிங்காடிவாக்கத்தில் இருளர் இன பழங்குடியினர் மக்களுக்கு 4.32 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். இவ்ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே), திரு.க.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments