ரூ.60லட்சம் மதிப்பில் காஞ்சிபுரத்தில் கண் அறுவைச் சிகிச்சை மைய கட்டடம்... எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.60லட்சம் மதிப்பில் புதிதாக கண் அறுவைச் சிகிச்சை மையக் கட்டிடம் கட்ட எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.
![]() |
படவிளக்கம் : கண் அறுவைச் சிகிச்சை மைய புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு செங்கல் எடுத்துக் கொடுத்த எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் |
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் மாடியில் கண் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மருத்துவ மனையின் நிலைய மருத்துவ அலுவலர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண் மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவர் அனந்தலட்சுமி வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினார்.முன்னதாக கண் மருத்துவப் பிரிவிற்கு வந்திருந்த வெளிநோயாளிகளிடம் குறைகளையும் கேட்டார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் சுரேஷ்,சந்துரு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டில் ரூ.13.50லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டவும் அடிக்கல் நாட்டினார்.பின்னர் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டவாக்கம், கோவிந்தவாடி கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களையும் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்து வைத்தார்.
No comments
Thank you for your comments