பொதுத் தேர்வு குறித்து அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது...
அரசு பாடநூல் கழக உறுப்பினர் செயலரும் காஞ்சிபுரம் மாவட்ட பொதுத்தேர்வுகள் கண்காணிப்பு அலுவலருமாகிய முனைவர் திரு மு. கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 13.03.2023 அன்று துவங்க உள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் மைய கட்டுக்காப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
அதில் தேர்வுகள் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும், மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தேர்வு வினாத்தாட்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லல் முதலான அனைத்து தேர்வு விதிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வி. வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) திரு பொ.வள்ளிநாயகம் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி ) திரு கு.ஜெய்சங்கர் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வுகள்துறை கூடுதல் இயக்குனர் திருமதி க.ராகினி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு / நலத்துறை மற்றும் தனியார் பள்ளிகள் 106 பள்ளிகளில் இருந்து 53 தேர்வு மையங்களில் 7014 மாணவிகள் உள்ளிட்ட 12 ஆம் வகுப்பு பயிலும் 13917 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு பணியில் சுமார் 1100 ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளார்கள்.
No comments
Thank you for your comments