Breaking News

சண்முக குருசாமியின் 93 வது ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருள்மிகு மதங்கீஸ்வரர் ஆலயத்தில் சண்முக குருசாமியின் 93 வது ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.  


காஞ்சிபுரம் ஹாஸ்பிடல் ரோட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு மதங்கீஸ்வரர் ஆலயத்தில் சண்முக குருசாமி அவர்களின் 93 வது ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது 

இதில் காலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சண்முக குருசாமிக்கு பக்தர்கள் மலர்மாலைகள். பட்டு மாலைகள். பட்டுவஸ்திரங்கள். சமர்ப்பித்து ஆசி பெற்றனர் . 

இதில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு சிவபுராணம் பாடி வழிபாடு செய்தனர். கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கதர் ஆடைகள் அணிவித்து பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார். 

சண்முகம் குருசாமி. மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை சண்முக குருசாமி தீவிர பக்தர்களான பி எஸ் லக்ஷ்சுமண சா. ரவிச்சந்திரன் குருசாமி. புண்ணியகோட்டி ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



No comments

Thank you for your comments