Breaking News

காஞ்சிபுரத்தில் பாகம்பிரியாள் அம்மனை மாலை போட்டு மூடி மறைப்பதற்கு காரணம் என்ன ? - கிளம்பிய சர்ச்சைகள்... குற்றச்சாட்டுகள்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் உற்சவர் பக்கத்தில் உள்ள பாகம்பிரியாள் அம்மனை மாலையைக் கொண்டு மூடி மறைப்பதின் பின்னணி அம்பாளுடைய தங்க திருமாங்கல்யம், (தாலி) தங்கப்பதக்கம் வெள்ளி கிரீடம், சிரசு சக்கரம், போன்ற விலை மதிக்கமுடியாத பல  ஆபரணங்களை களவாடி விட்டு காரணத்தினால் மாலையை போட்டு அம்மனை  மூடி மறைத்து விட்டனர்.


மேலும் நடுமாலை பாகம்பிரியாள் அம்மன் மீது வைத்து கட்டப்படுவதால் அம்மன் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  தற்போது 2023 பிரம்மோற்சவத்தில் சிம்ம வாகனத்தில் பூஜைக்கு  பயன்படுத்தக் கூடாத இலைகளைக் கொண்டு ஆகம விரோதமாக மாலை கட்டி  உச்சவருக்கு சாற்றி  மிக மோசமான அலங்காரம்  செய்து  உச்சவரே சேதப்படுத்தவும் அவமதிக்கின்ற விதமாக நடந்து கொள்கின்றனர் 


கடந்த 2022 ஆம் ஆண்டு  அறநிலையத்துறையில் அதிகாரிகள் ஒன்றைபடி மாலைகள் சாத்தக்கூடாது என்று அர்ச்சகர்கள் கொடுத்த  கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர் அவ்வாறு இருக்க  அறங்காவலர்கள் பொறுப்பேற்ற பிறகு ஒன்றைப்படி மாலைகள் சாற்றப்படுகின்றது

ஏற்கனவே பல கிலோ தங்கம் மோசடி செய்த அச்சர்கள் வினோத், சங்கர் அரவிந்த், ரமேஷ் குருக்களை வைத்து உற்சவருக்கு அலங்காரம் செய்வது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயமாகவும் உற்சவர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் குற்றவாளிகளை வைத்து உச்சவருக்கு இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் ஜெகன்நாதனும்  நடந்து கொள்வது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் நீளுகின்றன...

No comments

Thank you for your comments