அதிமுக முன்னாள் நகர செயலாளர் ஜி. சுப்பிரமணியின் 3ம் ஆண்டு நினைவு நாள்
காஞ்சிபுரம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் அம்மா பேரவை செயலாளருமான ஜி. சுப்பிரமணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் நகர அம்மா பேரவை செயலாளர் மாணிக்கம் தலைமையில் முன்னாள் நகர செயலாளரும் அம்மா பேரவை செயலாளருமான மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் 14வது வட்ட நிர்வாகி காமாட்சி ரவி எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஏழை எளியோர் பயன்படும் வகையில் புடவை வேஷ்டி மற்றும் அன்னதானங்களும் வழங்கினார். இதில் கழக அமைப்புச் செயலாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு வாலாஜாபாத் கணேசன் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஆர் டி சேகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம். பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் விஸ்வநாதன் , வாசு பொருளாளர் ராஜசிம்மன், பகுதி செயலாளர்கள் ஸ்டாலின், கோல்ட் ரவி, துரைராஜ், கண்ணப்பன், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு புடவை , வேஷ்டி, அன்னதானங்கள் வழங்கப்பட்டது.



No comments
Thank you for your comments