சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர்க்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 10ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தடகளம், இறகுப்பந்து, நீச்சல், 5s கால்பந்து, யோகாசனம் போன்ற போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி மாணவிகள் படிப்பதற்கான போனஃபைட் (Bonafide) சான்றிதழ்களை 10.03.2023 அன்று காலை 8.30 மணிக்கு போட்டி நடக்கும் இடத்தில் நேரடியாக சமர்ப்பித்து போட்டிகளில் கலந்துகொள்ளலாம்..
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண். 7401703481 (அல்லது) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
No comments
Thank you for your comments