Breaking News

ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் மாசி மாத அனுஷ நக்ஷத்ர விழா

ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் சைதாப்பேட்டை பார்சன் நகரில் உள்ள டிரஸ்ட் வளாகத்தில் மாசி மாத அனுஷ நக்ஷத்ர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.




காலை 6 மணி அளவில் கணபதி, ஆவஹந்தி, ஆயுஷ்ய, நக்ஷத்ர, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஹோமங்களாக ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவ மூல மந்த்ர ஹோமம் (பள்ளி மாணாக்கர்களின் வித்யா அபிவிருத்திக்கும், தேர்வுகளை கருத்தில் கொண்டும்), ஸ்ரீ சுப்பிரமணிய த்ரிசதி ஹோமம், மற்றும் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மூல மந்த்ர ஹோமங்கள் சிறப்பாக நடந்தேறியது.

அனைத்தையும் மேற்கு மாம்பலம் ஸ்ரீ பாலாஜி சாஸ்திரிகள் குழுவினர் நடத்தி வைத்தனர். 

ஹோமத்தின் முடிவில் ஸ்ரீ மஹா பெரியவா உத்சவ திருமேனிக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை செய்விக்கப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆன்லைனில் சங்கல்பத்தில் பெயர் கொடுத்தவர்களுக்கு ஹோம பிராசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது

No comments

Thank you for your comments