17.02.2023 ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் அன்று தமிழ்க்கனவு நிகழ்ச்சி
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும், தொன்மையானது என்பதையும், தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழிமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு சென்று சேர்ப்பதற்கு மாபெரும் தமிழ்க்கனவு என்ற நிகழ்ச்சி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் வரும் 17.02.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்தநிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் திரு.யுகபாரதி மற்றும் திரு. ஸ்டாலின் குணசேகரன் ஆகிய சிறப்பு சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இது தவிர மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன், புதுமைப்பெண், கல்விக்கடன், தொழில் முனைவோருக்கான அரசுத் திட்டங்கள், வங்கிக்கடன் வாய்ப்புகள், மகளிர் சுய உதவிக்குழுப்பொருட்கள் விற்பனை, சிறுதானியம் குறித்த முக்கியத்துவம் அடங்கிய பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. எனவே இந்தநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு நமது பண்பாட்டின் உயர்ந்த செழிமையையும், தமிழர் மரபும் – நாகரிகமும் பற்றி அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
No comments
Thank you for your comments