Breaking News

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  இன்று (08.02.2023)  காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பற்று அட்டைகளை (Debit Cards) வழங்கி, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திருவள்ளுவர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக புதுமைப் பெண் திட்டத்தினை  தொடக்கி வைத்த நிகழ்வினை. தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  மாணவிகளுக்கு பற்று அட்டையுடன் கூடிய தொகுப்பு பையினை வழங்கி மாணவிகளிடம் தெரிவித்ததாவது:

 நமது மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தபட்டு வருகிறது. அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டங்களை சிறப்பிக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 18.03.2022 அன்று சட்டபேரவையில் அறிவித்த்தின்படி:

05.09.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டத்திற்கு முழுவடிவம் பெற்று புதுமைப்பெண் திட்டமாக  தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வி பயிலும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டது.

முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 கல்லூரிகளில் 3,917 மாணவிகளுக்கு பற்று அட்டை (Debit Card) வழங்கப்பட்டது. அதில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.39,17,000/- தொகையும், அக்டோபர் மாதத்தில் 3,885 மாணவிகளுக்கு ரூ. 38,85,000/- தொகையும், நவம்பர் மாதத்தில் 3,861 மாணவிகளுக்கு ரூ.38,61,000/- தொகையும், டிசம்பர் மாதத்தில் 3,908 மாணவிகளுக்கு ரூ.39,08,000/- தொகையும் முதற்கட்டமாக ஆக மொத்தம் ரூ.1,55,71,000/- (ரூபாய் ஒரு கோடியெ ஐம்பத்து ஐந்து இலட்சத்து எழுபத்தி ஓராயிரம்) தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று (08.02.2023) இரண்டாம் கட்டமாக 1,341 மாணவிகளுக்கு பண பற்று அட்டை (Debit Card) வழங்கப்பட உள்ளது. இதில் B.A படிக்கும் 285 மாணவிகளுக்கும், B.B.A படிக்கும் 49 மாணவிகளுக்கு, B.C.A படிக்கும் 71 மாணவிகளுக்கு, B.Com படிக்கும் 241 மாணவிகளுக்கு, B.E  படிக்கும் 203 மாணவிகளுக்கு, B.PHARM  படிக்கும் 10 மாணவிகளுக்கு, B.Sc படிக்கும் 369 மாணவிகளுக்கு, B.TECH படிக்கும் 66 மாணவிகளுக்கு, BAMS படிக்கும் 3 மாணவிகளுக்கு, BSMS படிக்கும் 3 மாணவிகளுக்கு, DGNM படிக்கும் 12 மாணவிகளுக்கு, DIPLOMA  படிக்கும் 29 மாணவிகளுக்கு என அனைவருக்கும் பண பற்று அட்டை (Debit Card) வழங்கப்பட்டது.

இன்று வருகை புரிந்துள்ள மாணவிகள் அனைவருக்கும் வரவேற்பு தொகுப்பு பை வழங்கப்பட்டது. இந்த பையில் இரண்டு புத்தகங்கள் (1.தொழில் வழிகாட்டி புத்தகம், 2. நிதி பற்றிய சிறு பத்தகம்) மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். வழங்கப்பட்டுள்ள பற்று அட்டை (Debit Card) Pre-Activate செய்யப்பட்டுள்ளது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரங்கள் உடனுக்குடன் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தினை அனைத்து மாணவிகளும் நல்ல வகையில் பயன்படுத்தி கொண்டு தங்கள் படிப்பின்மீது முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், திரு. ஜெ.மேகநாதரெட்டி. இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர்   சட்டமன்ற   உறுப்பினர்   திரு.கு.செல்வப்பெருந்தகை,   காஞ்சிபுரம் 

மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments