Breaking News

சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2023ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி ஆண்டு விழா நடைபெற்றன.



காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு விழா பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் சஞ்சீவி தலைமையில் சிறப்பு அழைப்பாளர் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலகுமார் கலந்து கொண்டு இவ்விழா நடைபெற்றன.

இவ்விழாவில் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், கரகாட்டம், சிலம்பம், யோகா போன்ற நிகழ்ச்சிகளை கண் கவரும் வண்ணம் செய்து காண்பித்தனர். இவற்றை கூடியிருந்த  பெற்றோர்கள், பொதுமக்கள் கைத்தட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.

மேலும் இவ்வாண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு வெற்றி பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராம். இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments