Breaking News

அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ பிடாரியம்மன், அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம்

விருத்தாசலம் அருகே சின்ன பண்டார குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ பிடாரியம்மன், அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் புடைசூழமிகச் சிறப்பாக நடைபெற்றது


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபண்டார குப்பம்கிராமத்தில் எழுந்தருளியுள்ள பழமைவாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர்,ஸ்ரீ பிடாரியம்மன், அய்யனார், ஆலயத்தின்மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டுயாக சாலையில் புனித நீர் ஊற்றப்பட்ட கலசங்கள் வைத்து  மூன்று கால பூஜைகள் நடைபெற்று

யாகசாலையில் இருந்துமேளதாளங்கள் முழங்க சிவாச்சாரையார்கள் புனித நீர் ஊற்றப்பட்ட கலசத்தை தலை மீது சுமந்து ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய விமானத்தின் கலசத்திற்கு தீப தூப ஆராதனைகள் செய்து புனித நீர் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது

ஆலயத்தை சுற்றி நின்றிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி பூமாலை, கூட்டுறவு சங்கதலைவர் சி .கே .பி ஆனந்தகுமார்தலைமையில் விழா குழுவினர் பாலகிருஷ்ணன், சங்கர்,  சுந்தரம்,ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்முன்னிலையில்,மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபிடாரி அம்மனின் பேரருளை பெற்று சென்றனர்.

No comments

Thank you for your comments