தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி மனு
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேப்பளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட சீராங்குப்பம் கிராமத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளஅரசு தரிசு நிலத்தை மீட்டுத் தரகோரிபொதுமக்கள் சார்பில்சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கம்மாபுரம் ஒன்றியம் விருத்தாசலம் வட்டம் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட சீராங்குப்பம் கிராமத்தில்தனியார் கல்வி நிறுவனம் இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதை தொடர்ந்து அந்த இடத்தை அளவீடு செய்து அத்து காண்பித்து அப்புறப்படுத்தி மீட்டு தர கோரி வருவாய் வட்டாட்சியர் அவர்களிடம் சென்ற மாதம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை முன்னிட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு வருவாய் துறை துணை போகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது
எனவே இன்னும் 14 நாட்களுக்குள் அளவீடு செய்து காண்பித்து இரும்பு வேலியை அப்புறப்படுத்த தவறினால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி விருத்தாசலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீணாங்கேணி மேட்டுக்குப்பம் ஆர்ச் பேருந்து நிறுத்தத்தில் வருகிற 13-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம்
என சார்ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் இதில் சீராங்குப்பம் கிராம பொதுமக்கள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments