சேலத்தில் மாபெரும் கராத்தே போட்டி... 25 மாணவிகளுக்கு கருப்புப் பட்டைகளை மாநகர போலீஸ் துணை கமிஷனர் வழங்கினார்
சேலம், ஜன. 31-
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவிகளுக்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கருப்புப் பட்டைகளை வழங்கினார்.
வேர்ல்டு சொடோகான் கராத்தே சங்கம் சார்பில் சேலத்தில் மாபெரும் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் செந்தில் பப்ளிக் ஸ்கூல், களூனி ஸ்கூல், சாரதா மெட்ரிக் ஸ்கூல், சென்சொசப், குளினி வித்திய நிகேதின் ஆகிய பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற 25 மாணவிகளுக்கு கருப்புப் பட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வேர்ல்டு சொடோகான் கராத்தே கிராண்ட் மாஸ்டர் குப்புராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (வடக்கு) மாடசாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கி பாராட்டினார்.
மாஸ்டர்கள் விச்சு, அருண்பிரபு, மணி, மாணிக்கம், பூமேஸ்வில், ஐஎம்ஏ பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments