Breaking News

மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் மருத்துவ தேவைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் ஒவ்வொரு வட்டம் ஒன்றியம் அளவிலான பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் மருத்துவத் துறை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தினர் பங்கேற்று அந்தந்த ஒன்றியங்களில் அந்தந்த பகுதிகளில் என்னென்ன மருத்துவ தேவைகள் உள்ளது என்பதை விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர்.


இதில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் குறிப்பிட்டு பேசியதாவது

வாலாஜாபாத் அரசு மருத்துவமனை 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது ஆனால் அங்கு இருக்கும் பணியாளர்கள் 30 படுக்கை வசதிக்கான அளவிலேயே உள்ளனர் எனவே தேவைக்கேற்ப மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் எலும்பு மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் தேவை 

அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார நிலையமாக செயல்படுகிறது அதனை பிரித்து தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி கோரிக்கை வைத்திருந்தோம் அதனை ஏற்று நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது


அய்யம்பேட்டை மற்றும் தென்னேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் காத்திருக்க காத்திருப்பு அறையும், தேவையான இருக்கைகளும் அமைக்க வேண்டியும் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

மிக முக்கியமாக விபத்து நிகழ்வுகளில் காயம் ஏற்பட்டவரை மீட்க பத்து நிமிடங்களுக்குள் எப்படி ஆம்புலன்ஸ் வசதி நாடு முழுதும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதேபோல ஒரு பிரசவ நோயாளர், பாம்பு கடி மற்றும் மற்ற சிகிச்சைகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் மருத்துவமனை அமைப்பதை விட அவர்கள் தோய்த் தன்மைக்கு ஏற்ப எந்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அணுக முடியுமோ அவ்வளவு எளிய தூரத்தில் மருத்துவ வசதிகளை திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அஜய்குமார் பேசினார்

No comments

Thank you for your comments