கழக தலைவரும் திராவிட மாடல் ஆட்சியைப் போல இணைந்திருக்குமாறு திருமண வாழ்த்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவருமான எஸ்.டி. கருணாநிதி மகள் க.சிவசங்கிரி வெ.சுசிந்திரன் ஆகியோர் திருமணம் சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகையில்,
கழகத்தின் மூன்றாவது தலைமுறையினரின் திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜக அதிமுகவை அடிமைப்படுத்துவதை போல் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தாமல், சுயமரியாதை சிந்தனையும் பெரியாரும் பகுத்தறிவு போல, பேரறிஞர் அண்ணாவும் மாநில சுயாட்சியும் போல, முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தமிழும் போல, கழக தலைவரும் திராவிட மாடல் ஆட்சியைப் போல, சிறப்பாக இணைந்திருக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த விழாவில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.செல்வபெருந்தகை, க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர் ராஜா, வரலட்சுமி மதுசூதனன், ஒன்றியசெயலாளர் ந.கோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வேலு, ஊராட்சிமன்ற தலைவர்கள் வெள்ளரை அரிகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் தேவிவேலு, பொதுக்குழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினர்கள் ப.பரமசிவன், கோமதிகணேஷ்பாபு, மல்லிகாரவிசந்திரன், ஒன்றியகுழு துணைத்தலைவர் மாலதி டான்போஸ்கோ, ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மனோஜ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments