காஞ்சி காமாட்சி கோயிலில் உண்டியல் திறப்பு - பக்தர்கள் காணிக்கை ரூ.87 லட்சம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.87 லட்சம் செலுத்தியிருந்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் 75 நாட்களுக்கு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் உண்டியல்களில் இருந்த தொகையை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ரொக்கமாக ரூ.87,09,731 இருந்தது. தங்கம் 808 கிராமும்,வெள்ளி 897.800 கிராமும் இருந்தன.
உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியின் போது அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா,கோவிந்தவாடி அகரம் தெட்சிணாமூர்த்தி கோயில் செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். உண்டியல்களின் மூலம் கிடைத்த தொகை அனைத்தும் காஞ்சிபுரம் சங்கர மடம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இட்டுவைப்பு செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments