குடும்ப பிரச்சினை... 6 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் தற்கொலை
காஞ்சிபுரம் :
குடும்ப பிரச்சினை காரணமாக 6 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேடு பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவர் சென்னை ஊறப்பக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரது மகள் நித்யாவுடன் திருமணம் ஆகி தற்பொழுது ஹேமந்த் என்ற 6 வயது மகன் உள்ளார்.
சென்னையில் உள்ள ஊறப்பக்கம் பகுதியைச் சேர்ந்த மாமனாரின் வீட்டில் கலையரசன் குடும்பத்துடன் தங்கி இருந்த நிலையில் வீட்டை லீசுக்கு விட்டு முதல் மாடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் திருவள்ளூர் மாவட்டம் திருமணிகுப்பம் ஊராட்சி வாசனாம்பட்டு கிராமத்தில் ஒரு மாதமாக மனைவி நித்தியாவின் தாத்தா வீட்டில் தங்கியுள்ளனர்.
மேலும் திருமணிகுப்பம் பகுதிக்கு அருகே உள்ள பண்ணூரில் ஹோட்டல் வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் சென்னை போரூர் பகுதியில் உள்ள தனது நித்தியாவின் அக்கா வீட்டுக்கு குழந்தையுடன் கடந்த ஒரு வார காலமாக சென்று தங்கி இருந்து நேற்று இரவு திருமணிகுப்பம் வாசனாம்பட்டு பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
கலையரசன் நித்யா மற்றும் குழந்தை மூவரும் ஒரு அறையில் தூங்கிய நிலையில் நித்யாவின் தந்தை வீட்டின் மேலே உள்ள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிகாலையில் 5 மணி அளவில் வீட்டின் ஜன்னலில் நித்தியாவின் தாத்தா சண்டியப்பன் பார்த்தபோது கலையரசனும் நித்தியாவும் தூக்கிட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து அறை உள்ளே சென்று பார்த்த போது குழந்தையும் இருந்து கிடப்பது குறித்து காவல் துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு காவல்துறையினர் திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் குழந்தைக்கு விவசாய களையிடுவதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை கொடுத்து குழந்தை இறந்ததும் தெரியவந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments