வணிகர் உரிமை முழக்க மாநாடு விளக்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் மே 5 ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு விளக்க கூட்டம், கடலூர் மண்டல ஆலோசனை கூட்டம் மற்றும் விருத்தாசலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் வணிகர் சங்கம் சார்பில்மே 5 ல் ஈரோட்டில்நடைபெற உள்ள வணிகர் உரிமை முழக்க மாநிலமாநாடு, குறித்த கடலூர் மண்டல ஆலோசனை கூட்டம் மற்றும் விருத்தாசலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
கடலூர் மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்பிடி ராஜன் முகமது கனி ஸ்ரீதர் கோபு மணிவண்ணன் சேது முகமது ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில்வணிக பேரமைப்பின்மாநில தலைவரும்,தேசிய முதன்மை துணைத் தலைவருமானஏ. எம். விக்ரமராஜாசிறப்புரையாற்றினார்
விருத்தாசலம் மாவட்டதலைவர் ராஜன்,செயலாளர் ரவிச்சந்திரன்,பொருளாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள்பொறுப்பேற்றனர்
மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா அறிமுகம் செய்து வைத்தார்
செய்தியாளர்களிடம் மாநில வணிகர் பேரவை தலைவர்விக்ரமா ராஜா பேசியதாவது,
மே 5 ஆம் தேதிஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் சங்க உரிமை முழக்க மாநாட்டிற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இதில் மத்திய மாநில அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்
முதல் தீர்மானமாகஉணவு பாதுகாப்பு அதிகாரிகளை மத்திய மாநில அரசுகள் கடுமையாக கட்டுப்படுத்திட வேண்டும்
ஆன்லைன் டிரேடிங் என சொல்லப்படுகிற பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களினால் சாமானிய வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்அவர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முறையான சட்டத்தை இயற்ற வேண்டும் .
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் வேலைவாய்ப்பை தேடி செல்ல வேண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வணிகர்கள் நாங்களே உருவாக்கி தருவோம் எனவும்
தமிழக இளைஞர்கள் தமிழக வேலைகளுக்கு செல்லாத காரணத்தால் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் நிறைந்து காணப்படுகிறார்கள் அவர்கள் மாதத்திற்கு 18000 கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றார்கள் அதனை அவர்களுடைய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள் இதனால் தமிழகத்தில் பணப்புழக்கம் குறைந்து வியாபாரமும் பாதிப்படைந்துள்ளது
தமிழக இளைஞர்கள் கஞ்சா மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் வேலைக்கு செல்வதை நிறுத்தில் கொண்டு அனைவரும் அந்த பழக்கத்தை விட்டு வேலைக்கு சென்றுஉழைத்திட வேண்டும் அவர்களுக்கு வேலை கொடுக்க வணிகர் பேரவை எப்பொழுதும் தயாராக இருக்கிறது எனவும்
சொத்து வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை குறைக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தப்படும் எனவும்
ஆன்லைன் வர்த்தகம் குறித்து அதனை கட்டுப்படுத்திசாதாரண வணிகர்கள் பாதிப்பு அடையாமல் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வருகிற 13-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள வணிகர் மாநாட்டில் நிதியமைச்சர் சீதாராமனிடம் வலியுறுத்தப்படும் எனவும்
விருத்தாசலம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக பணிகளை வணிகர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பாதிப்பு அடையாமல் உடனடியாக சாலை விரிவாக்க பணியை முடிக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.
No comments
Thank you for your comments