இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் அதிகார அமைப்பு, தேமுதிக, தமிழ் தேச முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் விருத்தாசலத்தில் அமைய உள்ள மகளிர் கலை கல்லூரியை விருத்தாசலத்தில் அமைத்திட வேண்டும் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்ககோரியும், மூடி கிடக்கும் அரசு சூரியகாந்தி மணிலா எண்ணெய்பிழியும் ஆலையை திறந்திடுக,
விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுக, பேருந்து நிலையத்திற்கு இலவசமாக தனது இடத்தை கொடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராசுவின் பெயர் பலகை வைக்க கோரியும், கடைவீதி தென்கோட்டை வீதி உள்ளிட்ட பகுதிகளில்பேருந்து நிறுத்தபயணிகள் நிழற்குடை அமைத்து கழிவறை அமைக்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
நகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் கோகுலகிரிஷ்டீபன், கதிர்காமன், சேகர், வழக்கறிஞர் ராஜமோகன், ஆகியோர் முன்னிலையில் முழக்கங்களிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்செய்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments