திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் தங்கக் கருட வாகனக் காட்சி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர பிரமோத்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை உற்சவர் விஜயராகவப் பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மணவாள மாமுனிகள் உட்பட பல்வேறு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரம் அருகேயுள்ள மரகதவல்லித்தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்.இக்கோயிலின் வருடாந்திர பிரமோத்சவம் நிகழ் மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 3வது நாள் நிகழ்ச்சியாக உற்சவர் விஜயராகவப் பெருமாள் தங்கக் கெருட வாகனத்தில் எழுந்தருளி பாலுசெ"ட்டி சத்திரம் மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.அங்கு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.
நிகழ் மாதம் 21 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.23 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும்,27 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments